bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 4 ஜூன், 2017

ஜெனரிக் மருந்து- சில கேள்விகள்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மக்களின் வசதிக்காகவும், அவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணமும் மருத்துவர்கள் இனிமேல் ஜெனரிக் மருந்துகளை மருந்துச் சீட்டில் (பரிந்துரை சீட்டு) எழுதவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். 

அதனை தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் பிரதமரின் யோசனையை வழிமொழிந்தது. இது மருந்துத் துறையில் மக்களை பாதுகாக்க வந்த மற்றுமொரு துல்லியத் தாக்குதல் என மோடி பாராட்டப்பட்டார். 

தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவும் மோடியின் இந்த கோரிக்கை அறிவிப்பு இந்திய மருத்துவத் துறையின் முக்கியமான திருப்பம் என வருணித்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். 
குழப்பங்கள் உருவாயின. 

பல காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இப்பிரச்சனையை விவாதப் பொருளாக்கின. நிற்க. மோடியின் அறிவிப்பு நல்லெண்ணத்துடன் சொல்லப்பட்டதா? 

அல்லது அரசியலா? 

என்பதை அறியும் முன்னர் இந்திய மருந்துத் துறையின் ஆரம்ப காலம், வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

பாதையும் வளர்ச்சியும்...
இந்தியாவில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் பன்னாட்டு நிறுவனங்கள் தான் மருந்துகளை இறக்குமதி செய்து, வியாபாரம் செய்து பெரும் லாபம் அடைந்தனர். 
விடுதலைக்கு பிறகு சோவியத் யூனியன் உதவியோடு, ஐ.டி.பி.எல் நிறுவனமும், யுனெஸ்கோவின் உதவியோடு எச்.ஏ.எல். (HINDUSTAN ANIBIOTICS LIMITED) நிறுவனமும் துவங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களும் அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்தன. 

குறிப்பாக மிக குறைந்த விலையில் அக்காலத்தில் தேவைப்பட்ட அடிப்படை மருந்துகளை சந்தையில் மிக குறைந்த விலையில் கொடுத்தன. இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மருந்துகளின் விலைகளை குறைத்தன.
அதோடு சேர்ந்து 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டம், வழிமுறைக்கான காப்புரிமையை ஏற்றுக் கொண்டதால் ஏராளமான நிறுவனங்கள் மலிவு விலையில் மருந்துகளை உற்பத்தி செய்துஆரோக்கியமான போட்டியை உரு வாக்கின. 

அடுத்ததாக, ஜெய் சுக்லா ஹாத்திதலைமையிலான குழு கொடுத்த பரிந் துரைகள், குறிப்பாக தேவைக்கேற்ற உற்பத்தி,விலை கட்டுப்பாடு, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் மருந்துகள் கிடைக்க வழிமுறைகள் என அனைத்தும் இணைந்து இந்திய மருந்துச் சந்தையை உச்சத்துக்கு கொண்டு சென்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்து பின்னுக்கு தள்ளின.

இன்று 2017இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு சந்தையின் மதிப்பு 1லட்சம் கோடி
யாகவும், ஏற்றுமதி சுமார் 70 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. 
இந்த பிரம்மாண்ட சந்தையை, பின்னுக்கு தள்ளப்பட்ட பன் னாட்டு நிறுவனங்கள் எப்படி விடுவார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலக மாற்றங்கள் சாதகமாக இருந்தன. 

குறிப்பாக உலகமயமாக்கல், அதன் நீட்சியாக சுதந்திர வர்த்தகம், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் என அனைத்து ஒப்பந்தங்களும் ஒவ்வொன்றாக தொடர்ந்தன.
 சொல்லவே வேண்டாம். அனைத்தும் நம் நாட்டின் சுயசார்புக்கு எதிராகவே இருந்தது.

தீர்மானிக்கும் பிரதான பிரச்சனை
இன்று விவாதிக்கப்படும் மிக முக்கியமான மையக்கரு ஜெனரிக் மருந்துகளின் விலை மிகவும் குறைவு, ஆனால் இன்று வர்த்தகப் பெயரோடு (BRANDED DRUGS) சந்தையில் விற்கப்படும் மருந்துகளின் விலைகள் அதிகம் எனும் விவாதம் கிளம்பியுள்ளது. உண்மை என்ன? காரணம் பல பத்திரிகைகளில் முழு விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக, நுனிப் புல்லை மேய்ந்து கட்டுரைகள் எழுது கிறார்கள், இந்தியாவில் மருந்து விலைகளை தீர்மானிப்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பான தேசிய மருந்து விலை

ஆணையம். இந்தியாவில் சந்தையில் அறி முகப்படுத்தும் அனைத்து மருந்துகளும் அம்மருந்தை உருவாக்க, உற்பத்தி செய்ய ஆகும் செலவுகள், மற்றைய செலவுகள் என அனைத்தையும் கணக்கில் கொண்டு விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதே போல, மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை
யம் (DRUG PRICE CONTROL ORDER) கட்டுப்பாட்டுக் குள் இருக்க வேண்டிய மருந்துகளின் விலையை தீர்மானிக்கும். 

கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மருந்துகள் என்பது அடிப்படையில் மக்கள் நீண்ட நாட்களுக்கு, தீரா நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள்.
தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் பல காரணிகளை கொண்டு விலைகளை தீர்மானிக்கிறது. அப்படி மருந்துகள் விலை அதிகபட்சமாக போகக் கூடாது எனும் உயர் விலையை அறிவித்த பிறகும் நிறுவனங்கள் அதை மீறுகின்றன. 

இது எப்படி சாத்தியம் என கேட்கலாம்? இந்தியாவில் எதுவும் சாத்தியம்….இங்கு சட்டங்களை மீறுபவர்களே அதிகம். இதற்கு சான்றுகளாக ஏராளமான தரவுகளைகொடுக்க முடியும். உதாரணமாக ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் மருந்து அம்லோடிபின் (AMLODIPINE). இந்த மருந்தின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.3.10ஆக இருக்கலாம் என தேசிய விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் கூடுதல் விலைக்குவிற்கின்றன. நம்மில் பலருக்கு உடனே
கேள்வி எழக்கூடும். 

ஜெனரிக் மருந்துகளாக இருந்தால் விலை குறையுமே? 
வர்த்தகப்பேரில் இருப்பதால் தானே இப்பிரச்சனை யெல்லாம். ஜெனரிக் மருந்துகள் மட்டும் இதற்கு தீர்வல்ல அது ஒரு அரசியல் சூழ்ச்சியின் துவக்கப் புள்ளி. 

இந்தியாவை தவிர உலகில் எந்த நாட்டிலும் வர்த்தகப் பெயரில் மருந்துகள் இல்லை என்பதை சொல்லி ஜெனரிக் மருந்துகளுக்கு ஆதரவாகவாதாடும் நண்பர்கள் வசதியாக பல விவரங்களை மறைக்கின்றனர். ஏனைய நாடுகளில் மருந்துகளின் விலையை விட இந்தியாவில் தான் மருந்துகளின் விலை குறைவு. காரணம் இங்கே வர்த்தகப் பேரில் மருந்துகள் இருப்பதால் மருத்துவர்கள் எது தன்னுடைய நோயாளிகளுக்கு பலன் தருமோ அதை எழுத வாய்ப்புள்ளது. 

ஆனால் மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் என ஒன்று மட்டும் தான் இருக்கிறது. 
ஆக மருந்துகள் எழுதுவதற்கு பின்னால் பல விவரங்கள் உள்ளன.

பன்னாட்டு சூட்சுமம்
இந்தியா பல பத்தாண்டுகளாக உலகமய மாக்கல் கொள்கைகளை முழு மூச்சாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எதிர் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் காப்புரிமைச் சட்டத்தில் சட்ட மாற்றங்கள் நிறைவேற்றப்பட்டதால் மெல்ல மெல்ல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவை அனைத்தும் கொள்கை முடிவுகளாக அரசுகளே எடுக்கின்றன. 

அதில் ஒன்று மருந்துத் துறை யில் 100சதவீத நேரடி அந்நிய முதலீடு. அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் உள்ளது தானே! 
இது என்ன புதுசு என வினவலாம். மருந்துத் துறையில் 100 சதவீத அந்நியமுதலீடு செய்ய தற்போது மோடி அரசு அனுமதித்துள்ளது. 
இந்தியச் சந்தையின் தற்போ தைய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடியை தாண்டும். இவ்வளவு மதிப்புடைய சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் விடுவார்களா? 

அரசுகளை தங்கள் கைப்பாவைகளாக மாற்றி தங்களுக்கு சாதகமாகச் சட்டம் இயற்றி கொள்ளை லாபம் அடிக்க முயற்சிக் கின்றனர். ஏற்கெனவே காப்புரிமைச் சட்டத் தின் விதிகளுக்கு உட்பட்டு பல புதிய, மருந்துகள் வரும் காலம். காரணம் நமது நாட்டில்ஆராய்ச்சி செய்து எந்த புது மருந்தும் கண்டு
பிடிக்கமுடியாத சூழலில், பன்னாட்டு நிறு வனங்கள் ஏறக்குறைய 300க்கும் அதிகமான புது மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்துகள் அனைத்துக்கும் மிக அதிகமான விலை நிர்ணயித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் எய்ட்ஸ், மன அழுத்தம், புற்று நோய், நீரழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல வாழ்க்கைச் சூழலால்ஏற்படும் நோய்களே அதிகம் என்பதால் அதற்கேற்ப புது மருந்துகளை அறிமுகம் செய்ய காத்திருக்கிறது. இதற்கு தடையாக இருப்பது இந்தியாவில் உள்ள நடைமுறை. அதாவது வர்த்தகப் பெயரால் (BRAND NAMES) பரிந்துரைப்பது. 
அதை மாற்றினால் தடைகள் நீங்கும்.

விலை நிர்ணயம்
போலிக்கண்ணீர்
ஜெனரிக் மருந்துகள் விலை குறைவாக இருக்கும், ஆகவே மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை எழுதவேண்டும் என மோடி அரசு சொல்வது மக்களின் நலன் கருதி அல்ல. 
பன்னாட்டு நிறுவன பாசம். இவர்களின் அரசு பதவியேற்றவுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் மருந்து வணிகத்தில் கட்டுப்பாடு இல்லா ஒப்பந்தம் முக்கியமானது. 

இதன் மூலம் இந்தியாவில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல்( விலை உட்பட)விற்பதற்கான விதியும் ஒன்று. அது மட்டுமல்லாமல், காப்புரிமை சட்ட மாற்றங்களில் தளர்வு, இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பான விதிகள் என அனைத்தையும் விரைவில் ஒப்பந்தங்கள் செய்திட உள்ளன. 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் மோடி பாஜக  அரசின் தந்திரத்தை என்ன சொல்வது?
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளை சிப்லா நிறுவனம் மிக குறைந்த விலையில் தயாரித்து, மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது. நல்ல தரத்தில் ,குறைந்த விலையில் தருவது ஒரு இந்திய நிறுவனம் அதை சகிக்க முடியுமா?

ஆக, ஜெனரிக் மருந்துகள் என வந்து விட்டால், வர்த்தகப் பெயர் இருக்காது. புதிதாக அறிமுகம் செய்யும் மருந்துகள் அனைத்தையும் அதிக விலைக்கு விற்கலாம்.
மோடி அரசு பதவிக்கு வந்தவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. 

மக்கள் நலன் சார்ந்த பல விஷயங்களை அதில் விவாதிப்பதாக அவ்வப்போது அருண் ஜெட்லி சொல்கிறார். 

ஆனால் ஒரு முறை கூட மருந்துகளின் விலை குறைப்பை பற்றி பேசியதில்லை. மாறாக அது பற்றி சில முதல்வர்கள் கேள்வி எழுப்பினால், கொள்கை முடிவுகள் இங்கு பேசுகிறோம், மற்றவைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிறோம் என சொல்கிறார்கள்.
மற்றைய மேலை நாடுகளில் ஜெனரிக் மருந்துகள் தான் பயன்பாட்டில் உள்ளன. 

ஆகவே நாமும் மாறவேண்டும் என சொல்கிறது
அரசு. பல உலக நாடுகள் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. விலையும் குறைவாக, தரமும் நிறைவாக இருக்கும் நமது தயாரிப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் மற்ற நாடுகளை பின்பற்றாமல், இந்தியாவை கொள்ளைக் காடாக மாற்ற நினைக்கும் இந்த அரசின் தந்திரத்தை என்ன சொல்வது?

மேலை நாடுகளில் உள்ள அரசுகள் தங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க இந்திய கம்பெனிகளை நாடுகின்றன. 
ஆனால் மோடி அரசோ பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க இலவச அனுமதி வழங்குகிறது.

ஜெனரிக் மருந்து தான் தீர்வா?
மருந்துகளை பொறுத்தவரை ஜெனரிக் மருந்துகள் எழுதப்படுவது நிரந்தரத் தீர்வு இல்லை. மருந்துகளை விலை குறைவாக விற்பதற்கு ஆக்கப்பூர்வமான பல்வேறு வழிகள் உள்ளன. குறிப்பாக மருந்துகளை உற்பத்தி விலைக்கே விற்க அரசு முயற்சி எடுக்கலாம். 
மருந்து விலை கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கிட வேண்டும். வரி விதிப்புகளை முறைபடுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெண்ட் ( CORONARY STENTS )
கருவிகளுக்கான வரிகள் பெரும் போராட்டத்திற்கு பிறகு குறைக்கப்பட்டது. 

இந்த வரிகுறைப்பினால் பாதிப்படைந்தது பன்னாட்டு நிறுவனங்கள் தான். இப்போதும் பல பன்னாட்டு கம்பெனிகள் குறுக்கு வழி களை பின்பற்றி பழைய விலைக்கே விற்கமுயற்சிக்கின்றன. ஆக சட்டங்கள் கடுமை யாக இருந்தாலே தீர்வுகள் கிடைக்கும்.
மத்திய அரசு மக்கள் மருந்தகங்கள் எனும் பேரில் சில மருந்துக் கடைகளை திறந்துகுறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் என அறிவிக்கை செய்கிறது. 

ஆனால், இங்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான மருந்துகளும் கிடைப்பதில்லை. அதற்கான ஆக்கப்பூர்வ மான மாற்றுத் திட்டத்தை அரசு முன்வைக்க வில்லை.
எப்போதும் போல மோடி தலைமையிலான அரசு விளம்பர நோக்கத்திற்காக ஜெனரிக்மருந்து விஷயத்தை தற்போது சொல்லியுள்ளது.

உண்மையும் புரட்டும்
இரத்த புற்று நோய்க்கான மருந்து இமாட்னிப் ஜெனரிக் மருந்தாக இந்திய நிறுவனம் தயாரித்து குறைந்த விலையில் (ஒரு மாதத்துக்கான மருந்து விலை ரூ. 8000) சந்தைப்படுத்துகின்றது. 
ஆனால் அரசோ காப்புரிமை செய்யப்பட்ட மருந்தான கிளிவெக் எனும் வர்த்தகப் பெயர் கொண்ட மருந்தை அதிக விலைக்கு விற்க ( ஒரு மாதத்துக்கான விலை 11,000) அரசு சட்டம் கொண்டு வருகிறது. 

அதே போல, சிறுநீரக புற்று நோய்க்கான மருந்தை இந்திய நிறுவனம் ஜெனரிக்காக 10,000 ரூபாய்க்கு கொடுப்பதை தடுத்து பன்னாட்டு நிறுவனம் 2,80,000 ரூபாய்க்கு விற்க அரசு சட்டம் போட்டு அனுமதி வழங்குகிறது.

ஒரு பக்கம் மக்களிடத்தில் ஜெனரிக் மருந்துகளை வாங்குங்கள், மருத்துவர்களே ஜெனரிக் மருந்துகளை எழுதுங்கள் என சொல்லிவிட்டு, மறுபுறத்தில் காப்புரிமை எனும் ஆயுதத்தை கொண்டு மக்களை வதைக்க இவர்கள் போடும் வேஷத்தை அம்பலப்படுத்திட வேண்டும்.
ஜெனரிக் மருந்துகள் வேண்டாம் என்பதல்ல ஒட்டுமொத்த மருந்துத் துறையை சீரமைக்க முயற்சியே எடுக்காமல் இந்த முடிவு மட்டுமே பலனளிக்காது என்பதே. 

மக்களின் தேவை, தற்போது உள்ள நிலை என பலவும் பரிசீலிக்கப்படவேண்டும். 
உள்ளபடியே அரசு பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் தொகை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. ஒட்டு மொத்த துறையும் தனியாரின் ஆதிக்கத்திற்குள் செல்கின்றது. அது பற்றி எங்கு கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்வதில்லை. 

சுகாதாரத்தை தனியார்மயமாக்கும் அரசின் விளையாட்டில் ஜெனரிக் மருந்து பயன்பாடும் ஒன்று என்பதில் மக்கள் தெளிவாக இருத்தல் அவசியம்.
                                                                                                                             நன்றி:தீக்கதிர்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மோடி திட்டம் (மாட்டிறைசி தடை )வந்தால் இனி சாலை ஒர  பன்றிகள் இடத்தை மாடுகள் பிடித்துக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...