bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இன்று உலக புகைப் பட தினம்.


ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.
பக்கம், பக்கம் உருவகப்படுத்தி எழுதும் செய்திகளோ, கட்டுரைகளோ ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு புகைப்படம் உணர்த்தும். சோகம், மகிழ்ச்சி, களிப்பு, கொண்டாட்டம், அழகு, குழந்தை, பூ, விலங்குகள், இயற்கைக் காட்சிகள், தடியடி, கலவரம், குண்டு வெடிப்பு, இயற்கைச் சீற்றம் என அனைத்தையும் வாய்பேச முடியாத நபருக்குக்கூட அதன் சாராம்சத்தை ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்தி விடும்.


புகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி என்பதுதான் கேமராவாக இருந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள் ஒளி கடந்து செல்லும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். எனவே, கேமராவின் செயல்பாட்டைப் பதிவு செய்தவர் இவரே.
இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைந்து 1660-ல் ஒரு சிறிய கேமரா, இரு படப் பெட்டிகளை உருவாக்கினர்.
பின்னர், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடாக உலக புகைப்பட நாள் என ஜனவரி 9-ம் தேதியைக் கொண்டாடினர். பின்னர், ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டன.


உலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான கேமராக்கள் வந்தன. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால் மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.
2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்பு கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல் திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டதால் கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை. மூதாட்டி கூட கேமரா பொத்தானை லேசாக தொட்டாலே தெளிவான புகைப்படம் கிடைத்துவிடும்.
மேலும், முன்பு பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்போது, அவை தேவையில்லை. மெமரி கார்டுகளே போதுமானது.


இருப்பினும் பழைய காலத்து கேமராக்கள் அருங்காட்சியகத்துக்கான காட்சிப் பொருளாக இருப்பதை மறுக்க முடியாது.
எந்தத் துறையாக இருந்தாலும் இப்போது புகைப்படம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. விளம்பரத்துக்கும், மக்களிடம் தங்களது உற்பத்தியைக் கொண்டு சேர்ப்பதற்கும் புகைப்படம் அவசியமாகிவிட்டது. அதுமட்டுமல்ல ஒரு நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரே புகைப்படத்தில் எடுத்துக்காட்ட முடியும். தமிழகத்தை மட்டுமல்லாது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின் கோரத் தாண்டவத்தை தமிழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரே படத்தில் பதிவு செய்து காட்டியிருந்தார். இத்தகைய புகைப்படங்களே உலக புகைப்பட தினத்துக்கான தேர்வாக அமைகின்றன. 


சில படங்கள்
-----------------------








நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...