bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 21 நவம்பர், 2011

வாய்தா ராணி..?



“                                             
”அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது.  அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது.  அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.”  இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள்.  ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.
இச்சொத்துக் குவிப்பு வழக்கு கிட்டதட்ட 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  இப்பதினைந்து ஆண்டுகளில் இவ்வழக்கை நடத்திய / நடத்திவரும் நீதிமன்றங்களை மயிருக்குச் சமமாகக்கூட ஜெயா மதித்து நடந்ததில்லை.  இந்தியக் குடிமகனைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு சட்டதிட்டத்துக்கும் தான் கட்டுப்பட்டு நடக்க மாட்டேன் என்ற அகங்காரத்தோடும், திமிரோடும் நடந்துவரும் ஜெயாவிற்கு, சட்டப்படியான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

1991ஆம் ஆண்டு ஜெயா முதன்முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்றபொழுது, அவருக்கிருந்த மொத்த சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடியே ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபாய் (ரூ.2,01,83,000) என அறிவிக்கப்பட்டது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு அறுபத்து ஆறு கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் ரூபாய்  (ரூ.66,44,73,000) என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.  ஜெயாவின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 33 மடங்கு அதிகரித்திருப்பதை அசாதாரணமானது என்ற வார்த்தைக்குள்கூட அடக்கிவிட முடியாது.  இத்துணைக்கும் அந்த ஐந்து ஆண்டுகளில் “”தான் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு தமிழக முதல்வர் என்ற கடமையை ஆற்றியதாக”ப் பீற்றிக் கொண்டவர், ஜெயா.  எனவே, அவர் முதல்வராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்காமல், கிம்பளம் வாங்காமல் அவரது சொத்து மதிப்பு 33 மடங்கு அதிகரித்திருக்க முடியாது.  இதுதான் இச்சொத்துக் குவிப்பு வழக்கின் சாரம்.
இதன் அடிப்படையில் 1996, டிசம்பரில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது வழக்குத் தொடுத்த அன்றைய தி.மு.க. அரசு, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு இவ்வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றத்தையும் அமைத்தது.  தமிழகத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஜெயா மீண்டும் தமிழக முதல்வர் ஆனார்.  அச்சமயத்தில் தனி நீதிமன்றம் சாட்சிகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிட்டு, ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.  “”தனக்குத் தொண்டை கட்டிக் கொண்டுவிட்ட காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது” என்ற நகைக்கத்தக்க, அலட்சியமான காரணத்தை முன்வைத்துக் கூண்டில் ஏறிநிற்க மறுத்துவிட்ட ஜெயா, “”நீதிமன்றம் தன்னிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்தால் பதில் எழுதித் தருவதாக”க் கூறினார்.  ஜெயாவின் கூற்றுக்குப் பொருள் என்னவென்று அறிந்திருந்த நீதிபதி, தனது பெஞ்ச் கிளார்க்கை கேள்விகளோடு போயஸ் தோட்டத்து பங்களாவிற்கு அனுப்பி வைத்தார்.  இல்லையென்றால், அ.தி.மு.க. மகளிர் அணியின் ஆபாச ஆர்ப்பாட்டமோ, உருட்டுக்கட்டையோ, கஞ்சா வழக்கோ அவரைத் தேடி வந்திருக்கும்.
                          
ஜெயாவின் விளையாட்டுப் பொம்மை போலத் தனி நீதிமன்றமும், சாட்சிகளும் உருட்டப்பட்டதையடுத்து, தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அன்பழகன் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, வழக்கை விசாரிக்க பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.
இதன் பின் இந்த வழக்கில் தாம் நேரடியாக ஆஜராகாமல் தப்பித்துக் கொள்வதற்கும், வாய்தா கேட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைப்பதற்கும், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கும், வழக்கையே அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கும் எனக் கடந்த ஏழாண்டுகளில் 130க்கும் மேற்பட்ட மனுக்களையும், வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி தொடுத்தது, ஜெயா கும்பல்.  அக்கும்பல் இதற்காக முன்வைத்த வாதங்கள் விசித்திரமானவையாகவும், வினோதமானவையாகவும் இருந்ததோடு மட்டுமின்றி, சட்டம், நீதித்துறையைக் கேலிக்குரியதாக்கி ஆட்டுவித்தன.  இந்நீதிமன்றங்கள் பல நேரங்களில் ஜெயா கும்பல் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தலையாட்டித் தம்மைத்தாமே கோமாளிகளாகவும் காட்டிக் கொண்டன.
ஜெயாவின் காண்வென்ட் ஆங்கிலத் திமிர் ஊர் அறிந்த ஒன்று.  அப்படிபட்ட ஜெயா வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு குற்றப்பத்திரிகையைத் தமிழில் மொழி பெயர்த்துத் தர வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  சிறப்பு நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டாலும், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
                              
குற்றப்பத்திரிகைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட பின், “”அதனைப் படிக்கத் தமக்கு கால அவகாசம் தர வேண்டும்; அதுவரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்” என ஜெயா கும்பல் அடுத்த மனுவைத் தாக்கல் செய்ய, அதன்படி அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது.  இக்கால அவகாசம் முடிந்த பின், “”குற்றப்பத்திரிகையில் பிழைகள் உள்ளன; அதைத் திருத்தம் செய்துதர வேண்டும்” என மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, அத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, ஜெயா கும்பல்.   “”வழக்கு விசாரணை நடக்கும்பொழுது தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்” எனத் தீர்ப்பளித்து விசாரணையைத் தொடங்குமாறு உத்தரவிட்டது, கர்நாடகா உயர் நீதிமன்றம்.
இச்சமயத்தில் இவ்வழக்கை காலவரையறையின்றி இழுத்தடிக்கும் நோக்கத்தோடு ஜெயா கும்பல் தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கையும், இலண்டன் அருகேயுள்ள தீவு ஒன்றில் உல்லாச விடுதி வாங்கிப் போட்ட வழக்கையும் ஒன்றாக இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய, அதனைச் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இரண்டு வழக்குகளையும் இணைத்து உத்தரவிட்டது.  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இந்த இணைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  உச்ச நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விதித்த இந்தத் தடையை நான்கு ஆண்டுகள் வரை சவ்வாக இழுத்து, அதன் மூலம் ஜெயா கும்பலுக்கு மனு போடும் வேலையைக் கணிசமாகக் குறைத்து வைத்தது.  எனினும், 2009இல் சொத்துக் குவிப்பு வழக்கும் இலண்டன் உல்லாச விடுதி வழக்கும் இணைக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.
இடைக்கால தடை நீக்கப்பட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியவுடனேயே, “”சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை” எனக் கூறி, வழக்கை அதன் தொடக்கப் புள்ளிக்கே இழுத்துச் செல்ல முயன்றது, ஜெயா கும்பல்.  இம்மனு தள்ளபடி செய்யப்பட்ட பின், “”தமக்கு அளிக்கப்பட்ட சம்மன் உத்தரவை மாற்ற வேண்டும்; சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்; குற்றப்பத்திரிகை நகலின் 3 பிரதிகளைத் தர வேண்டும்; ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலைத் தர வேண்டும்; மொழி பெயர்ப்பாளரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்” என உப்புசப்பில்லாத பல காரணங்களை முன்வைத்து 2010ஆம் ஆண்டில் மட்டும் 30 மனுக்களைச் சிறப்பு நீதிமன்றத்திலும், அதன் பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் ஒருவர் பின் ஒருவராகத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது, ஜெயா கும்பல்.
2011ஆம் ஆண்டில் முதல் ஏழு மாதங்களுக்குள்ளாகவே, சாட்சியங்களிடம் நடத்தும் விசாரணையை முடக்கும் நோக்கத்தோடு 23 மனுக்கள் ஜெயா கும்பலால் தாக்கல் செய்யப்பட்டன.  குறிப்பாக, குற்றவாளிகளுள் ஒருவரான சுதாகரன், “”தனது வழக்குரைஞரின் தந்தை காலமாகிவிட்டதால் வழக்கு விசாரணையை மூன்று வாரத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும்” என விசித்திரமான கோரிக்கையோடு மனு தாக்கல் செய்தார்.  வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, “”குற்றப்பத்திரிக்கையில் உள்ள தவறுகளைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணையை ஆறு மாத காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்தார்.  இம்மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரினார், ஜெயா.
ஆடிக்காற்றில் குப்பை பறந்துபோய் கோபுரத்தில் ஒட்டிக் கொள்வதைப் போல, தமிழக மக்களால் மீண்டும் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட ஜெயா, இந்த வாய்ப்பை சொத்துக் குவிப்பு வழக்கை ஒழித்துக் கட்டும் முயற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  குறிப்பாக, தமிழக அரசின் சார்பாக வழக்கை நடத்தி வந்த இலஞ்ச ஒழிப்புத் துறை, “”இவ்வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” எனக் கோரி, இவ்வழக்கின் அரசு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்குத் தெரியாமலேயே சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  சிறப்பு நீதிமன்றத்தில் இம்மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசே வழக்குத் தொடுத்தது.  “”கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யாவைத் தவிர்த்து வேறுயாரும் இவ்வழக்கில் ஆஜராகக் கூடாது; தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறை சாட்சியங்களிடம் மறு விசாரணை நடத்தக் கூடாது” என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இத்துணை தடைகளையும் தாண்டி சாட்சியங்களிடம் விசாரணை முடிந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிப் பதில் அளிக்கும்படி சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை ஜெயா கும்பல் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  முதல் குற்றவாளியான ஜெயா, தான் தமிழக முதல்வராக இருப்பதையும் பாதுகாப்புக் காரணங்களையும்  காட்டித் தப்பித்துக் கொள்ள முயன்றார்.  “”கோயில் குளத்திற்கெல்லாம் போக முடிந்தவருக்கு நீதிமன்றத்துக்கு வர முடியாதோ?” என அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கேள்வி எழுப்பி, ஜெயாவின் தகிடுதத்தத்தை அம்பலப்படுத்தினார்.  சசிகலாவும், இளவரசியும், “”தாம் பெண் என்ற காரணத்தை” முன்வைத்துத் தப்பித்துக் கொள்ள முயன்றனர்.  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி பெண் என்ற காரணத்தைக் கூறி பிணை கோரியபொழுது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாதத்தை முன்வைத்து கனிமொழியைக் கடுமையாகக் கண்டித்த தமிழகப் பார்ப்பனக் கும்பல், இப்பொழுதோ வாய் மூடிக் கிடந்தது.
இந்தச் சொத்தை வாதங்களைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன், உச்ச நீதிமன்றத்தை அணுகினார், ஜெயா.  “”எனது கட்சிக்காரருக்குப் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன.  பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.  அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எழுத்துபூர்வமாகவோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ பதில் அளிக்கிறேன் எனச் சொல்வதில் என்ன தவறு?” எனத் தனது வழக்குரைஞர் மூலம் திமிராக வாதம் புரிந்தார், ஜெயா.  இதற்கு, “”குற்றவாளிகள் சொல்லும் கதைகளையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதில் அளித்தாலும், “”அவருக்கு வசதியான தேதியில் ஆஜராகும்படி” ஜெயாவிற்கு சலுகை அளித்தனர்.  டான்சி நில மோசடி வழக்கில் ஜெயாவைத் தண்டிக்காமல், அவர் தனது மனசாட்சிபடி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றத்திடம் இதற்கு மேல் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.
இந்த அடிப்படையில்தான் ஜெயாவிற்கு வசதியான அக்டோபர் 20 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு நீதிபதியிடம் பதில் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதனையும் முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனக்கு வழங்கப்படும் இசட் ப்ளஸ் பாதுகாப்பைக் காட்டி, சிறப்பு நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராவதைத் தள்ளிப் போடக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார், ஜெயா.  உச்ச நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்த பிறகு, வேறு வழியின்றி, அக்.20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, பெரும்பாலான கேள்விகளுக்கு, “”தெரியாது”, “”நினைவில் இல்லை” என்றே பதில் அளித்திருக்கிறார், ஜெயா.  நவம்பர் 8 அன்று விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென ஜெயா விற்குச் சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டவுடன், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.
இந்த வழக்கில் ஜெயா தண்டிக்கப்படுவாரா, மாட்டாரா என்பதைவிடக் கவனிக்கத்தக்க முக்கிய விசயம் வேறொன்று உள்ளது.  ஜெயா பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை என்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும்.  இப்படிபட்ட நபரை, தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கைக் காக்க வந்த அவதாரமாக தமிழக மக்களின் முன் தமிழகப் பார்ப்பனக் கும்பல் நிறுத்தியிருப்பது எத்துணை பெரிய மோசடி!
                  
ஜெயாவின் இந்தக் கல்யாண குணங்கள் தெரிந்திருந்தும், உச்ச நீதிமன்றம்கூட, “”உங்கள் கட்சிக்காரர் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்” என்பதற்கு மேல் இந்த வழக்கு விசாரணையின்பொழுது அவரை வேறுவிதமாகக் கடிந்து கொண்டதில்லை.  ஜெயா திருந்திவிட்டார், மாறிவிட்டாரென்று கூப்பாடு போட்ட பத்திரிக்கைகள் அனைத்தும், அவரது இந்த இழுத்தடிப்புப் பற்றி மட்டுமல்ல, அவர் சொத்து குவித்த விதம் குறித்தும் வாய்மூடியே கிடந்தன.  குறிப்பாக, ஜெயாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட சுப்பிரமணிய சுவாமியோ சட்டமன்றத் தேர்தலில் ஜெயாவோடு கூட்டணி கட்டிக் கொள்ள போயசு பங்களா வாசலில் தவம் கிடந்தார்.  மற்ற செல்வாக்குகளைவிட, ஜெயாவின் சாதி அரசியல் செல்வாக்குதான் அவருக்குக் கேடயமாக இருந்து வருகிறது என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசாவிற்கும், கனிமொழிக்கும் கிடைக்க வாய்ப்பேயில்லாத செல்வாக்கல்லவா, இது.
                                                                                                                   நன்றி:புதிய ஜனநாயகம்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

தீரும் காகிதங்களும்,தீரா பிரச்னையும்,

 

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும். பாக்.நீரிணை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கும் இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 இவர் எதிர்கட்சித்தலைவராக இருக்கும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மீனவர்கள் பிரச்னையில் கடிதமாக எழுதுகிறார்.செயல் பட வில்லை என குற்றம் சாட்டினார்.இப்போது காகிதத்தையும்,எழுது கோலையும் இவர் எடுத்துக்கொண்டு கடிதம் மேல்,கடிதம் எழுதுகிறாரே?
இவரும் கருணாநிதி பாதையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டாரோ?இவர் கடிதத்தை மன்மோகன் படித்தவுடன்
மீனவர்கள் பிரச்னை தீர்ந்து விடுமா?
நல்லதே நடக்கட்டும்.ஆனால் மறு தேர்தலில் கருணாநிதி வந்து அதன் பின் இவர் வந்தாலும் மீனவர் பிரச்னை இருக்கத்தான் செய்யும்.அதற்கு பல காரணங்கள் உள்ளன.
மீனவர்கள் பிரச்னை ஒரு தீரா பிரச்னை.நம் மீனவர்களிடையும் சில குறைபாடுகள் உள்ளன.எல்லை தாண்டி போவது.இலங்கை மீனவர் பகுதிகளில் மீன் பிடிப்பது.அவைகளை நிறுத்தும் வரை இப்பிரச்னைக்கு கடிதம் எழுதி காகிதங்கள்தான் தீரப்போகிறது.மீனவர் பிரச்னை தீரப்போவதாகத்தெரிய வில்லை.

 

_________________________________________________________________________________________

- கமல் ஏன் உலக நாயகன்? 

                     

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது. • இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார். • இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. • கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார். • கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது. • கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது. • உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். • கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். • 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன். • இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன். • 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன். • கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது. •
                     
The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட) • சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. • டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ). • மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது. • கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. •
                      
ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்) • கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது. • அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார். • இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27. • டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது. •
             
உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார். • இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான். • தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான். • ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்" • கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான். • ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது. • சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன். • கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. • கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல். • தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.

அழிவுகளை ஏற்படுத்திய தன்னார்வ நிறுவனங்களின் பணம் : நோர்வே ஒப்புதல் வாக்குமூலம் - Tamil News Articles::இனியொரு:: Website

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட இலங்கையில் நோர்வே அரசின் பங்கு குறித்த  ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான  அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் விடுதலைப் போராட்டஙகளைச் சீர்குலைப்பதில் நோர்வே பிரதான பங்கு வகித்திருக்கிறது. தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெருந்தொகைப் பணம் போராட்டங்களைச் சீர்குலைப்பதற்கும் அழிவுகளை ஏற்படுத்துவதிலும் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அண்மையில் லிபியாவை ஆக்கிரமிப்பதிலும் இத் தன்னார்வ நிறுவனங்களின் பங்கு பிரதானமானதாக அமைந்திருந்தது. நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னார்வ நிறுவனனங்கள் சீரழிவிற்கு எவ்வாறு பயன்பட்டன என்பது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது. 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், நோர்வே மற்றும் இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி உதவி வழங்கப்பட்ட பெரும்பான்மையான இலங்கை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு 60 மில்லியன் நோர்வே நோக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மிலிந்த மொரகொட, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் நோர்வே சமாதான முனைப்புக்களில் முக்கிய வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட மொரகொட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை வெளி வளத் திணைக்களத்திற்கு 300000 மில்லியன் நோக்குகளும், இலங்கை அரசாங்கத்திற்கு 70000 மில்லியன் நோக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 6 நவம்பர், 2011

இன்று கமல் ஹாசன் பிறந்த நாள்.

 உலகநாயகன் ”கமல்ஹாசன்” பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அவரின் சாதனை விளக்கக் காணொளி காணுங்கள்.

    Kamal Haasan 07-11-2011

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் முதல் எண்ணைக்கிணறு[ஈரான்]1908 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

 

__________________________________________________________________________________________

கூகுள் அடுத்ததாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இறங்கப்போகிறதாம்.இதற்காக ஏடி&டி நிறுவனத்தை இணைத்துக்கொண்டுள்ளது.

                           .

இக்கேபிள் டி.வி.இய்க்கத்திறகு டைம் வார்னர்,வால்ட் டிஸ்னி நிறுவனங்களை கூட்டாளியாக்கியுள்ளது.இதற்காக ”டிரிபிள் பிளே” எனப்படும் பாக்கேஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இது தொலைக்காட்சி,தொலை பேசி,காணொளி ஆகிய மூன்றும் அடங்கியது.

_________________________________________________________________________________________

அமெரிக்காவில் பரவும் கைப்பற்றுவோம் போராட்டம் இப்போது அட்லாண்டாவில் நடக்கிறது.அங்கு கைது செய்யப்படும் பெண்கள்.


வேண்டப்படாதவர்கள்.



                                   
”இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கவில்லை’ பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் மட்டுமே இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்த நிலை எடுக்குமாறு கருத்தினை முன்வைத்தது . இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடந்து வரும் நிலையில் புதுதில்லியுடனான வர்த்தக நோக்கில் பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது” என்றார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
                                  

பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பிர்தெüஸ் அவான் தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு கிலானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்..
1996-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா அளித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகபாகிஸ்தான் இத்தகைய அறிவி வெளியிடாமல் இருந்தது. இதற்கு அரசியல் ரீதியாகவும், அரசிலும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. காஷ்மீர் விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் அரசியல் நடைபெறுவதால் இதற்குஎதிர்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்பிரதமர் கிலானி”,இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கவில்லை.  இப்போதைக்கு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கை தொடர்பாக சுயமாக முடிவெடுத்துக்  கொள்ள வர்த்தக அமைச்சகத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. பிற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்று கிலானி குறிப்பிட்டார்.
முன்னதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அவான் வெளியிட்டவேண்டப்பட்ட இந்தியா அறிவிப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்  வரவேற்பு தெரிவித்தார்.” இதுபோன்று பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இப்போதைக்கு “வேண்டப்பட்ட நாடு” அறிவிப்பு பாகிஸ்தான் வெளியிடாததால் இந்தியாவில் விலை வாசிகள் பயங்கரமாக ஏறும் நிலை உள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு அதுதான் காரணம்.?பாகிஸ்தான் இந்தியாவை வேண்டப்பட்ட நாடு” என்று அறிவிப்பை விட்டுவிட்டு எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யாமல் விட்டு விடுமா?
வேண்டப்பட்ட நாடு என்ற உரிமையை தருவதால் என்ன பயன்? வர்த்தகம் நடத்த சில சலுகைகள் கிடைக்கும்.அதனால் நாடுக்கு என்ன நன்மை.இங்குள்ள அம்பானிகள் தங்கள் வியாபரத்தையும்,பணக்குவியலையும் பெருக்கிக்கொள்வாரகள். மக்களுக்கு-இந்திய வளர்ச்சிக்கு ஒரு பயனும் இல்லை.
ஏற்கனவே இந்தியா வேண்டப்பட்ட நாடு என்பதால்தான் இங்கு ஆங்காங்கு தனது குண்டை தீவிர வாதிகளைத்தூண்டிவிட்டு வைக்கிறதே.அந்த உரிமை நமக்கு போதாதா?
____________________________________________________________________________________________________________வெடிக்கக்_கூடா[ங்]குளம்
                         
கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவங்க தயாராகி விட்டது. ஆனால் இப்போதுஅணுமின் நிலையத்தை மூடக்கோரி, ஒரு தரப்பினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இதில், பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். அணு எதிர்ப்பாளர்கள் கூறுமணுசக்தி தொடர்பானசெய்திகளை கேட்டு, பெண்களும், கிராம மக்களும் பயமடைந்துள்ளனர்.இதில், பெரும்பாலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிலர், திட்டமிட்டு போராடுவதாக கூறப்படுகிறது.
உதயக்குமார் என்பவர் தலைமையில் போராட்டம் நடக்கிறது. இதில், ஜெயக்குமார், சுசிலன் ஆகிய இரண்டு பாதிரியார்களும், அவர்களை சார்ந்தவர்களும் மும்முரமாக உள்ளனர்.இரண்டு மாதங்களுக்கு மேலாக, மிகுந்த பொருட்செலவுடன் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்ட பகுதிக்கு வருவோர், வாகனங்களில் வரவும், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளுக்கும் அதிக பணம் செலவாகிறது. போராட்டக்காரர்களின் அச்சம் போக்க, மத்திய அரசு 15 பேர் குழுவையும், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மற்றும் போராட்டக்காரர்கள் அடங்கிய ஆறு பேர் கமிட்டியை மாநில அரசும் அமைத்துள்ளது. அணு உலையை திறக்க கோரி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில், அனைத்து சமுதாய தலைவர்கள் அடங்கிய 15 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உண்ணாவிரதம், விழிப்புணர்வு பிரசாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
                              
:ஆனால்அணு எதிர்ப்பு போராட்ட பின்னணியில், வெளிநாட்டு, மேற்கத்திய நாட்டு சக்திகள் உள்ளதாகவே, இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் பானர்ஜிகூறியுள்ளார்.
அணு எதிர்ப்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஏன் போராட்டம் நடக்கிறது என்பதை அறியும் முயற்சி நடக்கிறது. ஒரு தேசிய கட்சியால் கூட ஒரு போராட்டத்தை, ஒரு வாரம் வரை மட்டுமே நடத்த முடியும். ஆனால், ஒரு சிறு குழு, இரண்டு மாதங்களுக்கு மேல், மக்களை திரட்டி வந்து, தொடர் போராட்டம் நடத்துவது, எளிதல்ல. இடிந்தகரையில் முகாமிட்டுள்ள குழு, இதை செய்து வருகிறது.தற்போது, சில அரசியல் தலைவர்கள், அவ்வப்போது ஏதாவது பிரச்னையை கிளப்பும் தலைவர்கள் சிலர், அணு எதிர்ப்பு குழுக்களுடன் கலந்துள்ளனர். இது மட்டுமின்றி, சில கடல் வாணிப குழுக்களும், போராட்ட பின்னணியில் உதவி செய்வதாக அணுசக்திக்கழகமும்,மத்திய அரசும் எண்ணுகிறது.
                                               
கூடங்குளம் அணு உலை இருக்கும் பகுதி, கடலை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், 24 மணி நேரமும் ராணுவம் சுற்றிக் கொண்டிருக்கும். இனிமேல் அங்கு சட்டவிரோத கடத்தல்களுக்கு, இடம் கிடைக்காது. இலங்கையை மையமாக வைத்து, வாணிபம் செய்யும் குழுக்களும், அந்தமான், லட்சத்தீவுகள், மொரீஷியஸ் தீவுகளை மையமாக கொண்ட சட்ட விரோத குழுக்களும், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பாதுகாப்பால்,பாதிக்கப்படுவார்கள்.இந்த போராட்டம், நாங்கள் எதிர்பாராத மக்கள் போராட்டமாக இருந்தாலும், பின்னணியில் பல வகை சக்திகள் பயன்பெறுகின்றன. மக்கள் பாதுகாப்பு மட்டும் தான், போராட்டத்தின் லட்சியம். ஆனால், அதன் பின்னணியில் பல லட்சியங்கள், ப"ல கரங்கள்', பல சக்திகள் பயனாளியாகின்றன.
இவை எல்லாம் மத்திய அரசுக்கு இதுவரை கிடைத்த தகவல்களாகத்தெரிகிறது.  
 அணு எதிர்ப்பு போராட்டம் இந்திய மக்களின் பாதுகாப்புக்கான பிரச்னை என்பதை விட அரச்சியல், சில மேற்கத்திய நாடுகள் தூண்டிவிடும் பிரச்னையாக மாறியுள்ளது.அதன் பாதுகாப்பை உறுதி செய்வது என்பதை விட அணுமின் நிலையத்தையே மூடிவிட வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் உள்ளதாகத் தெளிவாக தெரிகிறது.மத்திய அரசு அமைக்கும் குழுவை புறக்கணிக்கும் இவர்கள் தாங்களாகவே குழு அமைப்பதாகக் கூறுவது அக்குழுவின் முடிவு எப்படிபட்ட அறிக்கையை தரும் ,அது மூடிவிட வேண்டும் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இருக்காதுஎன்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
இப்போதே சில மீனவர்கள் அல்லாத சாதியினர் இதை சாதிய-சமுக பிரச்சினையாக்குவதைக் காணும் போது கவலையாக இருக்கிறது.
                    
கூடங்குளத்தை சுற்றியுள்ள 27 கிராமத்தில் 2கிராமத்தினர்[கத்தோலிக்க மதத்தினர்}மட்டும் போராடுவதுடன் அவர்களுக்கு துணையாக குமரி,கேரளாவில் இருந்து ஆட்கள் வாகனங்களில் அழைத்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கவனிக்கப்பட வேண்டிய விடயம்.அவர்களுக்கு பாதுகாப்பதரும் தமிழகக் காவல் துறையினர் அணுமின் நிலையத்தில் பனிக்கு செல்பவர்களை பாதுகாப்பில்லை பணிக்கு செல்லாதீர்கள் என மிரட்டி திருப்பி அனுப்புவதும் அங்கு நடக்கிறது.
இந்தஅணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து பக்கத்துக் கிராமத்தைசேர்ந்த நாடார் ,தேவர் சமுகத்தினர் உண்ணாவிரதம்,ஆர்பாட்டம்,துண்டறிக்கைகள் என அணுமின் நிலையத்திஅற்கு ஆதரவாக இறங்கியுள்ளது கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.தமிழக அரசும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுவதை நிறுத்தி விட்டு நடுநிலையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.ஒரு சாதிய மோதலை தமிழகத்தில் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
   ஸ்பெய்ன் கடலுக்கடியில் எரிமலை[05-11-11] வெடித்ததினால் ஏற்பட்ட கடல்அலைகள் . 

திங்கள், 31 அக்டோபர், 2011

கடாபி கொலைக்கான் முக்கிய காரணம்.



லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!
லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதமாகும். லிபிய எண்ணெயில் கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபிய பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளான ஈனி, டோட்டல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரெப்சால் ஆகியன இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தன.
அதிபர் கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்புவரை, லிபியாவின் தேசிய எண்ணெய்க் கழகம், அமெரிக்க  ஐரோப்பிய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களை அகழ்வு  சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வந்த போதிலும், நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிறுவனம் சுயேட்சையாக எண்ணெய் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், முற்றாக ஐரோப்பிய சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று கருதிய லிபியா, எண்ணெய் அகழ்வு  சுத்திகரிப்பு, வர்த்தகம் முதலானவற்றில்,  சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளையும் அனுமதித்தது. இதனால் ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தங்கள் லிபியாவில்  செல்லுபடியாகவில்லை.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர,  மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன.
இந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன.
பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூப்பி, கடாபி எதிர்ப்புக் கலகப் படையினருக்கு ராணுவ உதவி செய்வதாகவும், அதற்கீடாக அப்படையினர் எதிர்காலத்தில் லிபியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 35 சதவீதத்தைப் பிரான்சுக்குத் தர வேண்டுமெனவும் ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார். இது ஊடகங்களில் அம்பலமாகி நாறியது. கடந்த மார்ச் மாதத்தில் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி, தனது சொந்த மக்களையே கொன்றொழிக்கும் கடாபியின் சர்வாதிகார ஆட்சி சட்டபூர்வமாக நீடிக்க எவ்வித அருகதையும் இல்லை எனக் கொக்கரித்தார். பிரிட்டன் இப்படி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லையே தவிர, அந்நாட்டின்  உளவுப்படையினர் கடாபி எதிர்ப்பு படையினருடன் இரகசிய பேரங்கள்  பேச்சுவார்த்தைகளை  நடத்தி வந்தனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் செல்வாக்கு பெற்றுவரும் சீனாவை வெளியேற்றிவிட்டால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா தனது எண்ணெய்த் தேவையில் 25 சதவீதத்தைப் பெறமுடியும் என்றும், இது வளைகுடா நாடுகளிலிருந்து பெறும் எண்ணெயைவிட அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்காவின் வலதுசாரி பிற்போக்கு அமைப்பான ஹெரிடேஜ் பவுண்டேசனின் தலைவர்கள் தெரிவித்தனர். அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் லிபியா மீது அமெரிக்கா தனது மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போரை நடத்தியுள்ளது என்று இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.
கடந்த பிப்ரவரியிலிருந்தே கலகக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில் ஏகாதிபத்திய நாடுகளின் உளவுப்படையினர், குறிப்பாக சி.ஐ.ஏ. லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்து ஆயுதங்களை எகிப்தின் வழியாகக் கடத்தி வந்து கொடுத்தனர். சொந்த நாட்டு மக்களைக் கொடூரமாகக் கொன்றொழிக்கிறார் என்று குற்றம் சாட்டி, கடாபி அரசை முடக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்திய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த லிபியாவின் சேமிப்புகள் முடக்கப்பட்டன. ஐ.நா. தீர்மானத்தைக் கொண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில் நேட்டோ கூட்டணி நாடுகள் வான்வழியேயும் கடல் வழியேயும் லிபியா மீது தாக்குதலைத் தொடங்கின.
கடாபி எதிர்ப்புக் கலகப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் நிறுவனமான “அகோகோ’’வின் தலைவராக இருந்த அகமத் மஜ்பிரி, விடோல் நிறுவனம் ஏறத்தாழ 100 கோடி டாலர் அளவுக்கு கலகப் படையினருக்கு உதவியதாகவும், அதற்கீடாக அகோகோ மூலமாக கச்சா எண்ணெயையும் நாப்தாவையும் விடோலுக்குக் கொடுப்போம் என்றும் பச்சையாகவே அறிவித்தார். “எங்களுக்கு இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டிஷ் கம்பெனிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சீனா, ரஷ்யா, பிரேசிலுடன் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் உள்ளன” என்று ஏகாதிபத்தியவாதிகளின் குரலை எதிரொலிக்கிறார், இடைக்கட்ட அரசின் தலைவரும் கலகப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள அகோகோ எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான அப்தல் ஜலீல் மயோஃப்.
கலகப் படைகளின் வெற்றியைத் தொடர்ந்து,  ஸ்பெயின் நாட்டின் ரெஸ்பல் நிறுவனமும் இத்தாலியின் ஈனி நிறுவனமும் லிபியாவில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் ஈனி நிறுவனம் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார், இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பிரான்கோ பிராட்டினி. ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏறத்தாழ 70 சதவீத எண்ணெய் உற்பத்தியும் வர்த்தகமும் புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் எண்ணெய் நிறுவனங்களிடம் கைமாறியுள்ளன.
ஏதோ கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

இலவச[ஊழல்] கணினி

ஓட்டுக்கட்சித் தலைவர்களை தெய்வமாகப் பார்க்கும் பக்த   மனப்பான்மைக்கும், அதே தலைவர்களை தமது வியாபார நலன்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனப்பான்மைக்கும் இடையேயான கள்ளக்காதலின் விகாரமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள். இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற காசில் தூக்கியெறியப்படும் எலும்புத் துண்டுகள் என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவையே பன்னாட்டுக் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வகைசெய்யும் அட்சய பாத்திரங்களாகவும் விளங்குகிறது.

இந்தவகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியுடன் போட்டியில் முந்துவதற்கு, ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்களில் முக்கியமானது மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் (மடிக்கணினி) வழங்கும் திட்டம்.

கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டு 9,12,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 70 லட்சம் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கணினிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் எல்காட் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக 9,12,000 மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் ஜூன் 4, 2011 அன்று வெளியிட்ட டெண்டரின்படி – லினக்சு (LINUX) மற்றும் விண்டோசு (Windows Starter Edition) இயங்குதளங்கள், விண்டோசுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் ஆண்டிவைரஸ் மென்பொருள் ஒரு ஆண்டு உரிமத்துடன், 320 GB ஹார்ட் டிரைவ், 1.3 மெகாபிக்சல் ஒளிபடக் கருவி (Webcam), Wi-Fi வலையிணைப்பு வசதி, 8X டிவிடி எழுதி (DVD Writer) போன்ற வசதிகளுடன் கணினி வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கணினிக்கு 15,000 ரூபாய் வரை விலை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இருப்பதால் செலவு 10,000 ரூபாய் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது வெளிச் சந்தையில் சுமார் 2000 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. இதனோடு சேர்த்து, லினக்ஸ் இயங்குதளத்தை இரட்டைத் துவக்க முறையில் (Dual boot) அளிப்பதால், கணினி பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் உள்ளடக்குவதாக இருக்கும். மேலும், அலுவலகத் தேவைக்கான மென்பொருட்களையோ கல்விக்கான மென்பொருட்களையோ தனியே காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், எல்காட் நிறுவனம் தனது ஜூன் 4-ம் தேதியிட்ட டெண்டரில் திருத்தங்கள் செய்து ஆகஸ்டு 20-ம் தேதி  மறுடெண்டர் ஒன்றை வெளியிட்டது. மாற்றியமைக்கப்பட்ட டெண்டரில் லினக்ஸ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மைக்ரோசாப்டு விண்டோஸ் (Full Edition) மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டார்ட்டர் எடிஷனை விட சுமார் 5000 ரூபாய் விலை கூடுதலானது. விண்டோஸ் இயங்குதளத்தின் அதிக விலைக்கு ஈடு கொடுக்க முதல் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான கருவிகள் சிலவற்றை இரண்டாவது டெண்டரில் எல்காட் நீக்கிக் கொண்டது.  இவ்வாறு நீக்கப்பட்டவை – வெப்கேம் மற்றும் Wi-Fi வசதி, கூடவே 320 GB ஹார்ட் டிரைவ் 160 GB ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.

“விண்டோஸ் தான் பயன்படுத்த எளிதானது. லினக்ஸ் கற்றுக்கொள்வது கடினம்” என்று விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்திப் பழக்கமாகி விட்டவர்களுக்குத் தோன்றலாம். முதன்முதலில் கணினி பயன்படுத்த போகும் மாணவர்களுக்கு இவை இரண்டையுமே கற்பதற்கு சம அளவிளான உழைப்பும் முயற்சியுமே தேவை. அது மட்டுமல்லாமல், லினக்ஸ் போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்களை பள்ளிகளிலும் அரசு அலுவலங்களிலும் எந்தச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முன்மாதிரி ஏற்கனவே சில இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளவிலும் சில நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

2007-ஆம் ஆண்டு கேரள அரசு, எதிர்கால கணினித் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் தனது தகவல் தொடர்பு கொள்கையில் ‘அரசுத் துறைகளில் சுதந்திர கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவித்தது. கணினி அறிவை மக்களிடையே பரப்பவும், மென்பொருள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் வழிகாட்டலாக அந்தக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் எல்காட் நிறுவனம், 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.டி உமாசங்கரின் வழிகாட்டலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பஞ்சாயத்துகளிலும், பள்ளிகளிலும் கட்டற்ற சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்து மைக்ரோசாப்டின் ஆதிக்கத்தை உறுதியாக வெளியேற்றியது. 30,000 அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் லினக்சில் பயிற்சி பெற்றனர். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 400 கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்துகிறது.

லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை

 

 

மேற்சொன்ன “முன்மாதிரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில் லினக்சு மட்டும்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், வைரஸ் தொல்லை இல்லாத பயன்பாட்டுச் சூழலையும் ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்” என்று கணினித் துறைசார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.

இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wi-Fi,  வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும். மட்டுமல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் வைரஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மடிக்கணினிகளை வாங்கும் ஏழை மாணவர்கள் மேல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் வாங்க வேண்டிய சுமையும், தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்ஸ்களை செய்ய வேண்டிய சுமையும் விழுகிறது.

விண்டோஸ் இயங்குதளத்தின் தன்மையின் படியே, தொடர்ந்த பயன்பாட்டில் அது தனது இயங்கு திறனை இழந்து விடுமென்பது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, மாணவர்களின் கல்வி உதவிக்காக என்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பொருள் தீராத தலைவலியாக மாறப் போவது தான் எதார்த்தமான உண்மை. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் விண்டோஸைக் கட்டிக் கொண்டு மாரடிக்கப்போகிறார்கள். இதில் பழுது பார்க்கும் செலவும் ஆண்டி வைரஸ் மென்பொருட்களின் லைசென்ஸுகளை புதுப்பிக்கும் செலவும் வேறு மாணவர்களின் தலையில் இறங்கப் போகிறது.

ஈழத்தாயின் மனதையே மாற்றி விடுமளவிற்கு ஜூன் 4க்கும் ஆகஸ்டு 20க்கும் இடையில் என்ன தான் நடந்திருக்கும்?  அதைச் சொல்வதற்கு முன் மைக்ரோசாப்டு விண்டோஸ் இயங்கு தளத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது, லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள்தான் பரவலான மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழி என்று ஏன் சொல்கிறோம் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ணினித் துறையில் மென்பொருட்களை வணிக முறையில் கொள்ளை லாபம் வைத்து விற்பதற்கு  மைக்ரோசாப்டு முதலான முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கண்டுபிடித்த உத்திதான் closed source எனப்படும், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருள் உரிம முறை. மென்பொருள் விற்பவர்கள் பைனரியை மட்டும் வாங்குபவருக்கு கொடுத்து விட்டு, மூலநிரல் வடிவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதன் மூலம் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ச்சியாக பணம் கறக்கும் உத்தியை வளர்த்தெடுத்தனர். இதன் மூலம் கணினித் தொழிலில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்டன.

1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.

இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.

இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.

ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம்  அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.

1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில்  மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.

இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு  தளமாகவும் கிடைக்கிறது.

டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.

கணினித் துறையைப் பொறுத்த வரை கணினி இயங்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிறுவனம் மற்ற எல்லா மென்பொருட்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெறுகிறது. உதாரணமாக, விண்டோசு இயங்குதளம் பயனர் கணினிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுவதால், அதில் பயன்படுத்தப்படும் அலுவலக மென்பொருட்கள், தகவல் பகிர்வு மென்பொருட்கள், நிரல் உருவாக்க கருவிகள் சந்தைகளிலும் மைக்ரோசாப்டு தனது ஏகபோக ஆதிக்கத்தை பரப்ப முடிகிறது.

இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கணினி நிறுவனங்களை போட்டி இயங்குதளங்கள் நிறுவி கணினிகளை விற்கக் கூடாது என்று மிரட்டுவது (சொன்னதைக் கேட்கா விட்டால், விண்டோசு உரிமத் தொகையை 4 மடங்காக ஏற்றி விடுவேன்!), அரசாங்கங்கள் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த முயற்சிக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணையுடன் அந்த அரசுகளின் மீது அழுத்தம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்ற எதுவும் கைகொடுக்காவிட்டால், இலவசமாகவே விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து விடுவது. இயங்குதளத்தை இலவசமாகக் கொடுப்பதன் மூலம், பிற பயன்பாட்டு மென்பொருட்களில் கொள்ளை லாபம் அடித்துக் கொள்வது என்று சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள அயராது பாடுபடுகிறது மைக்ரோசாப்டு.

அமெரிக்க அரசு வியட்நாம் அரசை 3 லட்சம் விண்டோசு உரிமங்கள் வாங்க கட்டாயப்படுத்தியதையும், துனீசியா நாட்டில் அந்நாட்டு அதிபரின் மனைவி நடத்தும் சமூக சேவை நிறுவனத்துக்கு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி அளித்ததன் (விண்டோசு உரிமங்கள் அளித்ததன்) மூலம் அரசுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மைக்ரோசாப்டு மாற்றிக் கொண்டதையும் கடந்த ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தின.

இந்தியாவைப் பொறுத்தளவில் மைக்ரோசாப்ட் அத்தனை சிரமப் படத் தேவையே இல்லை. இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் அமெரிக்கா கண்ணைக் காட்டினால் கடலில் கூட பாய்ந்து விடத் தயாராக இருக்கும் போது அவர்களுக்குக் கவலையென்ன. கடந்த ஜூலை மாதம் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவிருக்கிறதல்லவா? அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதிய ஜூ.வி ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு பத்திரிகைகள் என்னவோ பக்கத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போல, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லிப்ட் ஏறிப் போய் அம்மாவைப் பார்த்தார்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா சொன்னதை கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டு போனார்கள்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

சீமான் போன்ற புதிய கோமாளிகள் முதல் பழம் பெருச்சாளிகளான தமிழனவாதக் குழுக்கள் வரை ‘ஈழம் காத்த தாயே…’ என்று ஆரம்பித்து விதவிதமான ‘அம்மா’ புகழ்பாடி ஊரெல்லாம் சுவரொட்டி அடித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.

அந்தச் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னதை ஜெயலலிதா கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார் என்பதுதான் நடந்ததுள்ளது. இதைத் தான் இந்த மடிக்கணினி டெண்டர் மாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன.   இதன் மூலம் 5 ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமானம் 3000 கோடி ரூபாய் மைக்ரோசாப்டுக்கு டீச்செலவுக்குச் சரியாகப் போகும் சிறுதொகையாக இருக்கலாம், ஆனால், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருளில் பயிற்றுவிக்கப்படும் தமிழ்நாட்டின் மாணவர்களும் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு சமூகமும் எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கு கப்பமாக கட்டப் போவது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களான சுமையாக இருக்கப் போகிறது.

இது ஒருபக்கமிருக்க, ஒரு நாட்டு அரசின் டெண்டரைக் கூட தலையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருப்பதும், இறையாண்மை மாநில உரிமையெல்லாம் கிழிந்த காகிதமாக பறக்கவிடப்படுவதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘புரட்சித் தலைவி’  அசைக்க முடியாத இரும்புப் பெண்மணி என  தினமலர்-இந்து-தினமணி-துக்ளக்குகள் கட்டி வந்த கதையும் அம்பலமாகியிருக்கின்றது

கவர்ச்சித் திட்டங்கள் ஊரை ஏமாற்றும் எத்து வேலைகள் தானென்றும், இவையெல்லாம் மக்களின் தாலியறுத்த காசில் எறியப்படும் எலும்புத்துண்டுகளென்றும் நாம் சொல்லி வந்தோம். கருணாநிதி பத்தடி பாய்ந்தால் அம்மா பதினோரடியாவது பாய வேண்டுமல்லவா? எனவே இதிலும் அம்மா ஒருபடி மேலே செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அமெரிக்காவிலிருந்து கழுதை விட்டைகளை இறக்குமதி செய்து மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார்.

_________________________________________________________ 

                                                                                          நன்றி:- குமார்
தகவல்மூலம் - http://www.tehelka.co#mce_temp_url#m/story_main50.asp?filename=Ws101011MICROSOFT.asp

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மக்களின் உயிரைக் காவு கேட்கும் மருந்து நிறுவனங்கள்.


அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டு கைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும்  மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர் பண்டாரி, மேற்படி பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பதன் காரணமாக இவ்வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்று அறிவுத்துறையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆட்சேபம் எழுப்பினர். இதன் விளைவாக இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து நீதிபதி பண்டாரி விலகிக் கொண்டார்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி
                       
பன்னாட்டு நிறுவனங்களுடன் சந்தேகத்துக்கு இடம் தரத்தக்க வகையில் தொடர்பு வைத்திருப்பது அம்பலமானதையடுத்து, நோவார்டிஸ் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி

இது தனிப்பட்ட நீதிபதி ஒருவரின் நடத்தை நெறிமுறை சம்மந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் உயிரை விலை கேட்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரமுமாகும். புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அதற்கேற்ப தீர்ப்பை வாங்க முயற்சிக்கின்றன. அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
நோவார்ட்டிஸ் என்ற சுவிஸ் பன்னாட்டு நிறுவனம், இமாடினிப் மெசிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை (வணிகப்பெயர் கிளிவெக்  Glivec) உற்பத்தி செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உரியதென்றும், தன்னுடைய காப்புரிமையை மீறி இந்திய மருந்து நிறுவனங்கள் இம்மருந்தை உற்பத்தி செய்து வருவதைத் தடை செய்ய வேண்டுமென்றும், இதற்கேற்ப இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக இந்திய அரசை நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவுக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் செய்த மேல்முறையீட்டை இந்திய அரசின் ‘அறிவுசார் சொத்துடைமைக்கான மேல்முறையீட்டு வாரியம்’ நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நோவார்ட்டிஸ் தொடுத்த வழக்கையும் 2007ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
மேற்கூறிய வழக்கில் நோவார்ட்டிஸின் மேல்முறையீடு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான தல்வீர் பண்டாரி என்பவர், அறிவுசார் சொத்துடைமை மற்றும் காப்புரிமைச் சட்டம் தொடர்பாக, அமெரிக்க அறிவுச் சொத்துடைமையாளர்கள் சங்கம் (அதாவது பன்னாட்டு கம்பெனிகள்) நடத்திய நீதிபதிகளுக்கான சர்வதேசக் கருத்தரங்கில் இரண்டு முறை (2009, 2011) கலந்து கொண்டிருக்கிறார். 2007இல் அறிவுசார் சொத்துடைமை தொடர்பாக இந்தியத் தரகு முதலாளிகள் சங்கம் (சி.ஐ.ஐ.), அமெரிக்க  இந்திய வர்த்தகக் கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டத்திலும் முதன்மை உரை ஆற்றியிருக்கிறார்.
“அறிவுச் சொத்துடைமையைத் தேச எல்லை கடந்து அமலாக்குவதில் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய வழக்குகளின் அனுபவமும், அறிவுச்சொத்துடைமையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும்” என்பது, 2009ஆம் ஆண்டு கருத்தரங்கில் நீதிபதி பண்டாரி ஆற்றிய உரையின் தலைப்பு. “மருந்துகள் தொடர்பான காப்புரிமை… குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொறுப்பு வளர்ந்த நாடுகளுக்கு இருக்கிறது; எல்லா நாடுகளும் (அறிவுச் சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு ஏற்ற) பொருத்தமான காப்புரிமைச் சட்டங்களை இயற்ற வைப்பதற்கும் அவர்கள்தான் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்’’  இது அந்த உரையில் அவர் தெரிவித்திருந்த கருத்து.
டெல்லி அறிவியல் கழகம் என்ற அமைப்பும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அறிவுத்துறையினரும், நீதிபதி தல்வீர் பண்டாரி குறித்து மத்திய சட்ட அமைச்சருக்கும் ஒரு பகிரங்க கடிதம் எழுதினர். இதன் பிறகுதான் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் பண்டாரி. ‘வழக்கிலிருந்து நீதிபதி விலகல்’ என்று ஒரு துணுக்கு போல வெளியான இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் இவ்வழக்கின் ‘மதிப்பு’ என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
_______________________________
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
நோவார்டிஸ் கிளிவெக் மருந்திற்குக் காப்புரிமை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தபொழுது, அதனைத் திரும்பப் பெறக் கோரி மும்பையிலுள்ள நோவார்டிஸ் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டம்.
லுகேமியா என்று அழைக்கப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளை மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ வைக்கும் மருந்து  இமாடினிப் மெசிலேட். இமாடினிப் மெசிலேட்  என்ற இந்த அடிப்படை மருந்தின் (generic drug) மூலக்கூறில் சிறியதொரு மாற்றம் செய்து, ‘கிலிவெக்’ என்று வணிகப்பெயர் (brand name) வைத்து, 40 நாடுகளில் இதற்குக் காப்புரிமையும் பெற்று வைத்திருக்கிறது நோவார்ட்டிஸ் நிறுவனம். ரத்தப் புற்றுநோயாளிகள் நாளொன்றுக்கு 4 மாத்திரைகள் வீதம் ஆயுள் முழுவதும் இம்மாத்திரையை சாப்பிட வேண்டும். கிலிவெக் மாத்திரை ஒன்றின் விலை 1000 ரூபாய். அதாவது ஒரு நாள் உயிர் வாழ்வதற்கு 4,000 ரூபாய். மாதத்துக்கு ஒன்றேகால் இலட்சம் ரூபாய்.
இம்மருந்தின் வேதியல் மூலக்கூறுக்கு (molecule) இந்தியாவில் யாருக்கும் காப்புரிமை வழங்கப்படவில்லை. எனவே இந்த அடிப்படை மருந்தை (generic drug) ரான்பாக்ஸி, சிப்லா, நாட்கோ, ஹெடெரோ என்பன போன்ற பல இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கின்றன. இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரை ஒன்றின் விலை 90 ரூபாய். அதாவது நாளொன்றுக்கு 360 ரூபாய்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 24,000 பேர். இவர்களில் 18,000 பேர் நாளொன்றுக்கு 360 ரூபாய் கொடுத்து மருந்து வாங்க முடியாதவர்களாகையால், மருத்துவமே பார்க்காமல் இவர்கள் இறந்து விடுகின்றனர். மீதமுள்ள 6000 பேர் இந்திய மருந்துகளால்தான் உயிர் பிழைத்திருக்கின்றனர். உலகெங்கிலும் ஏழை நாடுகளில் உள்ள ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  பல இலட்சக்கணக்கான நோயாளிகளும் இந்திய மருந்தை இறக்குமதி செய்து, அதனை உட்கொண்டுதான் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
நோவார்ட்டிஸ் தனது மருந்துக்குக் காப்புரிமை பதிவு செய்துள்ள 40 நாடுகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் இந்திய மருந்தை இறக்குமதி செய்து பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது காப்புரிமை விதி. அதாவது நாளொன்றுக்கு 4000 ரூபாய் செலவிட வசதியில்லாத ரத்தப் புற்றுநோயாளிகள் சத்தம் காட்டாமல் செத்துவிட வேண்டியதுதான். அத்தகையதொரு சூழ்நிலையை இந்தியாவில் இனிமேல்தான் வரவேண்டும் என்பதில்லை. இதனை ஏற்கெனவே நாம் அனுபவித்திருக்கிறோம்.
_______________________
2003ஆம் ஆண்டில், தன்னைத் தவிர வேறு யாரும் ரத்தப்புற்றுநோய்க்கான இம்மருந்தை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உரிமையை காட்டிரிப்ஸ் (GATT-TRIPS) ஒப்பந்தத்தின் கீழ் நோவார்ட்டிஸ் நிலைநாட்டிக் கொண்டது. இமாநிப், இமாலெக், டெம்சாப், சொலேடா (Imanib, Imalek, Temsab, Zoleta) என்ற பெயர்களில் விற்கப்பட்டு வந்த பிற இந்திய கம்பெனி மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது நோவார்ட்டிஸ் நிறுவனம். ஜனவரி 2004இல் நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடியவர், மைய அமைச்சரான ப.சிதம்பரம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையின் விளைவாக, கிலிவெக் மாத்திரையை 1000 ரூபாய் கொடுத்து வாங்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் செத்து மடிந்தனர். பொதுநலன் கருதி இந்தத் தடையை நீக்குமாறு இந்திய கம்பெனிகளும் புற்று நோயாளிகள் சங்கமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். எனினும், நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது.
2005ஆம் ஆண்டில் புதிய காப்புரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (1994இல் உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த இந்தியா, 1970இல் இயற்றப்பட்ட இந்தியக் காப்புரிமைச் சட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்குள் ரத்து செய்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் புதிதாக இயற்றப்பட்ட சட்டம் இது) நோவார்ட்டிஸ் நிறுவனம், கிலிவெக் மருந்தில் சிறிய சில மாற்றங்களைச் செய்துவிட்டு, இப்புதிய சட்டத்தின் கீழ் அதற்கு காப்புரிமை கோரியது. ‘புதியது’ என்று நோவார்ட்டிஸ் கூறும் மருந்தில் புதுமையோ, கண்டுபிடிப்போ (novelty or invention) ஏதுமில்லையென்று கூறி இந்திய காப்புரிமை ஆணையம் காப்புரிமை வழங்க மறுத்துவிட்டது. காப்புரிமை ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நோவார்ட்டிஸ், தான் செய்திருப்பது ‘மேம்படுத்தும் கண்டுபிடிப்பு’ (incremental innovation) என்றும், ஆகவே இதற்கும் காப்புரிமை தரவேண்டும் என்றும் வாதாடியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நோவர்டிஸின் தீவட்டிக் கொள்ளைக்கு ஆதரவாக வாதாடிய பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி ப.சிதம்பரம்
இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. 1995க்கு முன்னரே புழக்கத்தில் இருக்கின்ற இமாடினிப் மெசிலேட் என்ற காப்புரிமை இல்லாத மருந்தின் இலேசாகத் திருத்தம் செய்யப்பட்ட மறுபதிப்பே இந்த மருந்து என்றும், இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3 d பிரிவு கூறும் கண்டுபிடிப்புத்தன்மை (inventiveness) இதில் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கும் மேல் இம்மருந்துக்கு விலை வைக்கப்பட்டிருப்பதால், இதற்கு வழங்கப்படும் காப்புரிமை என்பது இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமைக்கு (அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு) எதிரானதாக அமையும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. “இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்  3 d பிரிவு, உலக வர்த்தகக் கழகத்தில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ள விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது” என்ற நோவார்ட்டிஸின் வாதத்தையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச ஒப்பந்தங்கள் பற்றி தான் கருத்து கூற இயலாது என்றும், உலக வர்த்தகக் கழகத்திடமே முறையிடுமாறும் கூறி நோவார்ட்டிஸின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
பிரச்சினையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றால், தன் யோக்கியதை உலக அளவில் அம்பலமாகும் என்பதால் நோவார்ட்டிஸ் இப்பிரச்சினையை உலக வர்த்தகக் கழகத்துக்குக் கொண்டு செல்லவில்லை. ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட கோடிக்கணக்கான டாலர்களைத் திரும்ப எடுக்கத்தான் காப்புரிமை கோருவதாக, நோவார்ட்டிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது.
கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். தனியார்துறைபொதுத்துறை கூட்டு என்று கூறிக்கொண்டு, தன் பங்குக்கு உமியைக் கொண்டு வரும் முதலாளித்துவம், அவலை ஊதித் தின்கிறது என்ற உண்மைதான், நோவார்ட்டிஸ் விசயத்திலும் அம்பலமாகியிருக்கிறது.
1970 இந்திய காப்புரிமை சட்டம், எந்தப் பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்கு மேல் காப்புரிமையை அனுமதிக்கவில்லை. உ.வ.கழகத்தில் இணைந்த இந்தியா, காப்புரிமையின் காலத்தை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. நோவார்ட்டிஸ் காப்புரிமையைக் காலவரையறையற்றதாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறது. அதன்பொருட்டு, மருந்தில் சில சில்லறை முன்னேற்றங்களை செய்து காப்புரிமையை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு ஏற்ப (evergreening) சட்டத்தைத் திருத்த முனைகிறது.
2007இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, காப்புரிமைச் சட்டங்களைத் திருத்துவதற்காக ஒரு குழுவை மைய அரசு நியமித்தது. மஷேல்கர் குழு என்று அழைக்கப்பட்ட அக்குழு, காப்புரிமை சட்டத்தின் 3 d பிரிவை முடக்கும் வகையிலான சிபாரிசுகளை முன்வைத்தது. அவை அனைத்தும் மண்டபத்தில் வைத்து நோவார்ட்டிஸால் எழுதித் தரப்பட்டவை என்பதும், அந்த ‘சிபாரிசுகளில்’ இடம்பெற்றிருந்த வாக்கியங்கள்கூட  நோவார்ட்டிஸ் உள்ளிட்ட மருந்து கம்பெனிகளுடைய நன்கொடையில் வயிறு வளர்க்கும் ஐரோப்பிய ‘சிந்தனையாளர்களால்’ ஏற்கெனவே எழுதப்பட்டவைதான் என்ற உண்மையும் அம்பலமானது. வேறு வழியின்றி அரசு பின்வாங்கியது.
நவம்பர் 24, 2009 அன்று அமெரிக்க வர்த்தகக் குழுவுக்கும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரத்தை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.  நோவார்ட்டிஸைப்  போலவே, கிலியாட் என்ற அமெரிக்க மருந்துக்கம்பெனி, தான் தயாரிக்கும் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தில் சிறு மாற்றங்களைச் செய்துவிட்டு, புதிய மருந்து என்ற பெயரில் அதற்கு இந்தியாவில் காப்புரிமை கோரியிருக்கிறது. இந்தியக் காப்புரிமை ஆணையம் 3 d பிரிவின்படி அதனை நிராகரித்து விட்டது. ஆனால், “மேம்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை வழங்குவதே பயனுள்ளது என்று இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்” எனக் கூறுகிறது பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டக்குறிப்பு.
உலக வர்த்தகக் கழகத்துக்குப் போவதை விட, இந்திய அதிகார வர்க்கத்தையும், அரசாங்கத்தையும் பயன்படுத்தித் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை வாங்குவதுமே எளிமையான வழிமுறைகள் என்று நோவார்ட்டிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதுகின்றன. அதற்காகத்தான் சர்வதேச நீதிபதிகள் மாநாடு, பண்டாரியைப் போன்ற நீதிபதிகளின் கருத்துரைகள்!
நீதிபதிகள் மட்டுமல்ல, இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் தேடிப் பிடித்திருக்கும் வழக்குரைஞர்களும் நமது கவனத்துக்கு உரியவர்கள். முன்னாள் மத்திய அமைச்சரும், மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பெற்றிருந்தவருமான ப.சிதம்பரத்தைத்தான் 2003இல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கிற்கு பிடித்துப் போட்டது நோவார்ட்டிஸ். இன்று, 2011, ஜூலை 23ஆம் தேதியன்று சொலிசிட்டர் ஜெனரலாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் ரோகிந்தன் நாரிமன் என்பவர்தான், ஜூலை 22ஆம் தேதிவரையில் நோவார்ட்டிஸின் வழக்குரைஞர். ஜூலை 22ஆம் தேதியன்று தனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்த கோபால் சுப்பிரமணியம்தான் ஜூலை 23 முதல் நோவார்ட்டிஸின் வழக்குரைஞராக நியமனம் பெற்று விட்டார். இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்தை நீதிமன்றத்தில் உடைப்பதற்கு, அத்தகைய சட்டங்களை உருவாக்கியவர்களையே அமர்த்திக் கொண்டுள்ளது நோவார்ட்டிஸ். சட்டத்தின் வரிகளுக்கும் எழுத்துக்களுக்கும் இடையில் நுழைந்து வியாக்கியானமளித்து, பன்னாட்டுக் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்பை  வாங்கித் தருவதற்கு இந்த விலைமாந்தர்கள் பாடுபடுவார்கள்.
இந்த வழக்கில் நோவார்ட்டிஸ் வெற்றி பெற்றால் ரத்தப் புற்றுநோய் மருந்துக்கான காப்புரிமை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நோவார்ட்டிஸின் கையில் இருக்கும். மாதம் 1.2 இலட்சம் ரூபாய் மருந்துக்குச் செலவிட முடியாமல் பல ஆயிரம் மக்கள் சாகவேண்டியிருக்கும். சில ஆயிரம் மக்கள் தமது சொத்து, சேமிப்பு அனைத்தையும் நோவார்ட்டிஸின் காலடியில் சமர்ப்பித்து, போண்டியான பிறகு உயிரை விட வேண்டியிருக்கும். நோயாளிகளின் உறவினர்கள் மருந்துக்காகக் கடன் வாங்கி, வாங்கிய கடனைக் கட்ட இயலாமல் தற்கொலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்திய மருந்து கம்பெனி ரான்பாஸியை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனம் கையகப்படுத்திதை அறிவிக்கிறார். ரான்பாக்ஸியின் தலைவர் மல்விந்தர் மோகன் சிங்
இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் 3(d) பிரிவை நெகிழ்த்துவதில் நோவார்ட்டிஸ் வெற்றி பெறுமானால், அடுத்து 10,000 மருந்துகள் வரிசையில் நிற்கின்றன. அவை அனைத்துக்கும் இந்திய அரசு காப்புரிமை வழங்க வேண்டியிருக்கும். எயிட்ஸ் முதல் காசநோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட எல்லா நோய்களுக்கான மருந்துகளும்  எட்டாக்கனியாகிவிடும். அது இந்திய மக்களை மட்டுமின்றி, மலிவான இந்திய மருந்துகளைச் சார்ந்து உயிர் வாழும் ஏழை நாட்டு மக்களையும் மரணத்துக்குத் தள்ளிவிடும்.
ஏனென்றால், இந்தியாவின் மொத்த மருந்து உற்பத்தியில் கணிசமான பகுதி ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக யூனிசெப், ஐ.நா. மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் 87 ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் மருந்துகளில் 70% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. உலகம் முழுவதும் நுகரப்படும் எயிட்ஸ் நோய்க்கான மருந்துகளில் 80 சதவீதமும், எயிட்ஸ் நோயுடனேயே பிறக்கும் குழந்தைகளுக்கான மருந்தில் 92 சதவீதமும் இந்தியாவிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன. பல்வேறு நோய்களுக்குமான மூல மருந்துகளை (generic drugs),  இந்திய நிறுவனங்கள் குறைந்த விலைக்குத் தருவதனால்தான், ‘உலகின் மருந்து தொழிற்சாலை’, ‘ஏழை நாடுகளின் மருந்துக்கடை’ என்ற நற்பெயர்களை இந்தியா ஈட்டியிருக்கிறது. இந்தியாவின் காப்புரிமைச் சட்டத்தைத் திருத்திவிட்டால் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற்றுவிட்டால், இந்தியாவின் மருந்து உற்பத்தி  ஏற்றுமதி முழுவதையும் நிறுத்தி, உலக மருந்துச் சந்தை முழுவதிலும் தங்களது தீவட்டிக் கொள்ளையை நடத்த முடியும் என்பதே பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு.
நீதிமன்றத் தீர்ப்புக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. இந்திய மருந்துக் கம்பெனிகளை ஒவ்வொன்றாக விழுங்கி வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்(பார்க்க: பு.ஜ. மார்ச், 2011). இதன் காரணமாக காப்புரிமை இல்லாத மருந்துகளின் விலையே கடுமையாக உயர்ந்து விடும் என்று அஞ்சுவதாக நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. (எகனாமிக் டைம்ஸ், பிப்.24) அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தையின் 40 சதவீதத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றி விடும் என்று கூறுகிறார் எஸ்.பாங்க் என்ற பன்னாட்டு வங்கியின் உதவித் தலைவர். மருந்து உற்பத்தித் துறையில் அந்நிய மூலதனம் நுழைந்ததன் ‘பயன்’ இதுதான்.
“காற்றில்லாத வெற்றிடத்தைக் கண்டு இயற்கை அஞ்சுவதைப் போல, இலாபம் இன்மை அல்லது மிகக் குறைந்த இலாபம் ஆகியவற்றைக் கண்டு மூலதனம் பீதி கொள்கிறது. பொருத்தமான இலாபம் இருக்கும் பட்சத்தில் மூலதனம் விழித்துக் கொள்கிறது. 10% இலாபம் என்றால் எங்கேயும் வரத் தயார். 20% என்றால் மூலதனம் குஷியாகிவிடுகிறது. 50% என்றால் கேட்கவே வேண்டாம், கம்பீரம்தான். 100% இலாபம் என்றால் எல்லா மனிதச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு மூலதனம் தயாராகிவிடுகிறது. 300% இலாபம் என்றால் எத்தகைய கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கும் மூலதனம் தயார். தூக்கு மேடை ஏறுவதற்கும் மூலதனம் துணிந்து விடும்” என்று மூலதனத்தின் இலாபவெறி பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.
கிலிவெக் மாத்திரையில் மட்டும் நோவார்ட்டிஸ் 1000% இலாபம் பார்க்கிறது. இந்த இலாப விகிதத்தோடு ஒப்பிட்டால், நோவார்ட்டிஸ் நிறுவனம் நீதிபதிகளுக்குச் செய்திருக்கும் விருந்துபசாரம் என்பது மிகவும் சாதாரணமான குற்றமாகவே தெரிகிறது. அல்லது நோவார்ட்டிஸின் மிகச் சாதாரணக் குற்றங்களைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது என்றும் கூறலாம்.
_நன்றி:______________________________________
                                                   

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...